மட்டு மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட கணக்காய்வு உத்தியோகத்தர் முரளி ஓய்வு பெற்றார்.....
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தராக கடமையாற்றிய, சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஏரம்பமூர்த்தி முரளிதரன் 29.02.2024 முதல் தன் ஓய்வு நிலையை பெற்றிருந்தார். அவருக்கான பிரியாவிடை நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட செயலக்கில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்கம் 25.03.2024 அன்று நடாத்தி இருந்தது.மட்டக்களப்பு மாவட்ட பிரதம கணக்காளரும் சமுர்த்தி பிரிவின் பதில் கணக்காளருமான M.S.பஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு ஏரம்பமூர்த்தி முரளிதரன் அவர்களின் சேவையை பற்றி நினைவு கூர்ந்தனர்.
2000ம் ஆண்டு சமுர்த்தி முகாமையாளராக தன் பணியை தொடங்கிய இவர் வவுனதீவு, ஆறுமுகத்தான் குடியிருப்பு மற்றும் கரடியநாறு ஆகிய சமுர்த்தி வங்கிகளில் முகாமையாளராக கடமையாற்றி, பிற்காலத்தில் கணக்காய்வு பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டு, தம் செவைலய நேர்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றி விடைபெற்ற ஒரு சேவையாளர் ஆவார்.
இந்நிகழ்வில் இவரை கௌரவிக்கும் முகமாக பொண்ணாடை அணிவித்து நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
Comments
Post a Comment