பாடுகளின் பாதையில் சிலுவைப்பாதை பவனி .........

 பாடுகளின் பாதையில் சிலுவைப்பாதை பவனி .........

வாழைச்சேனை - கல்குடா பங்கு மக்கள் இணைந்து நடாத்திய பாடுகளின் பாதையில் சிலுவைப்பாதை பவனி (23) ஆரம்பமானது.

வாழைச்சேனை புனித  திரேசாள் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய சிலுவைப்பாதை பவனி  கல்குடா புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது.

வாழைச்சேனை பிரதான வீதி கல்குடா பிரதான வீதி  வழியாக பெருந்திரளான மக்கள் பவனியில் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பங்குத்தந்தை அருட்தந்தை அன்டனி டிலிமாவும், கல்குடா பங்குத்தந்தை அருட்தந்தை நோட்டன் ஜோன்சனும் அவர்களோடு இணைந்து வாழைச்சேனை மற்றும் கல்குடா பங்கு மக்களும் இதனை ஆயத்தம் செய்திருந்தனர்.







Comments