கவிதைகள் தினத்தில் மட்டக்களப்பில் கல்லடிகவிஞர்கள் கௌரவிப்பு.....

 கவிதைகள் தினத்தில் மட்டக்களப்பில் கல்லடிகவிஞர்கள்  கௌரவிப்பு.....

மார்ச் - 21 ஆகிய இன்று உலக கவிதைகள் தினமாகும். இத்தினத்தில் கவிஞர்களை கௌரவிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வசிக்கும் கவிஞர்களை மட்டக்களப்பு பிரமுகர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று கௌரவித்த நிகழ்வு இன்றைய தினத்தில் விசேட நிகழ்வாக நடைபெற்றது.


கல்லடி கவிஞர்களில் ஒருவரான  கல்லூர் சாந்தி அவர்களையும் கல்லடியின் மற்றுமொரு கவிஞரான வில்லூர் பாரதி அவர்களையும் மட்டக்களப்பின் பிரபல பட்டிமன்ற கலைஞரான கதிரவன், பெட்டி மீடியா ஊடக நிறுவன உரிமையாளர் சிவா, சிரேஷ்ட ஊடகவியலாளர் உதயகாந்த், உதவும் கரங்கள் இல்லத் தலைவர் ஜெயராஜா மற்றும் கதிரவன் பட்டிமன்ற ஆலோசகர்  அதிபர் அ.குலேந்திரராசா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌவரவிக்கப்பட்டதோடு  பரிசுப்பொதியும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 







Comments