புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி.................

புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி.................

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (12) செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் இடம் பெற்றது. அருட்தந்தை பிரகாஷ் ரெட்டி நற்சிந்தனையோடு இவ் விளையாட்டு போட்டி கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆலோசகர் தோல் மருத்துவர் நல்லரத்தினம் தமிழ்வண்ணன் மற்றும் கௌரவ அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் முகாமைத்துவப் பொருளாதார பீடம் பேராசிரியர் டி.பவன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த வருடத்தை போல இந்த வருடமும் விளையாட்டு போட்டியில் மாறி இல்லம் 485 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டதோடு, ஃப்ரீடா இல்லம் 452 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், காசில்டா 368 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் மற்றும் 332 புள்ளிகளைப் பெற்று கான்சிலியா நான்காவது இடத்தை தன் வசப்படுத்தியது.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன. இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.







Comments