நாவற்குடா சின்ன லூர்து திருத்தலத்தில் இரத்ததான நிகழ்வு....

 நாவற்குடா சின்ன லூர்து திருத்தலத்தில் இரத்ததான நிகழ்வு....

மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து திருத்தலத்தில் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. பங்குத்தந்தை இன்னாசி ஜோசப் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பங்குச்சபையின் மேற்பார்வையில் இவ்இரத்ததான நிகழ்வு (10) இடம்பெற்றது.

தற்போதைய காலத்தில் இரத்த தட்டுப்பாடு நிலவும் காரணத்தால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி கேட்டுக் கொண்டதற்கினங்க இவ்இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்து நாவற்குடா இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் அன்டன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் பிரஸ்னவி பத்மநாதன் அவர்களும் வைத்தியர் ரமாஜினி துஸ்யந்தன் ஆகியோருடன்  வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டு இச்சேவையை  வழங்கி இருந்தனர். இதன் போது சுமார் 45 கொடையாளிகள் தங்கள் உதிரங்களை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.















Comments