“அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” சர்வதேச மகளிர் தின நிகழ்வு...........
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் அவர்களின் தலைமையில் வந்தாறுமூலை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கடந்த (15)ம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி தர்சினி சுதந்தர்ராஐன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், நிகழ்வை மெரு கூட்டும் வகையில் பல தரப்பட்ட கலை நிகழ்வுகளும் இடப்பெற்றது மேலும் நிகழ்ச்சிகளை வழங்கிய அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் பிரதம அதிதி உட்பட சிறந்த சுயதொழில் முயற்சியாளர்கள், பின்தங்கிய குடும்ப சூழலிலும் கல்வி , விளையாட்டு மற்றும் சேமிப்புக்களில் சாதனை படைத்த மகளிர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம் பெற்றது.
பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு சுய தொழிலினை ஊக்குவிக்கும் முகமாக சிறு கடையினை நடாத்துவதற்கான பொருட்களும் 09 பேருக்கான தலா 10,000 வீதம் சுழற்சி முறைக்கடன்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் நிகழ்வில் கணக்காளர் டிலானி ரேவதன், நிர்வாக உத்தியோகத்தர் புஸ்பம் யேசுதாசன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரம், சமுர்த்தி சமூக மன்றத்தின் தலைமையக முகாமையாளர் செ.ராஜலிங்கம், கிராம நிர்வாக உத்தியோகத்தர் தி.லிங்கேஸ்வரன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபா நெல்சன், சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள், ஊடகவியலாளர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment