மட்டக்களப்பில் AUலங்கா நிறுவனத்தின் மாவட்டத்திற்கான புதிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு......

 மட்டக்களப்பில் AUலங்கா நிறுவனத்தின் மாவட்டத்திற்கான புதிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு......

AU லங்கா நிறுவனத்தின் மாவட்டத்திற்கான புதிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  மட்டக்களப்பில் இடம்பெற்றது

AU லங்கா நிறுவனமானது சிறுவர்களை மையப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காலநிலை மாற்றம் எனும் புதிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக நீர்ப்பாசன குளங்கள், விவசாய மற்றும் நன்னீர் மீன்பிடி குளங்கள் போன்ற நீர்நிலைகளை புணரமைக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

சையில்ட் பண்ட் நிறுவன நிதி அனுசரணையில் AUலங்கா நிறுவனம், வவுணதீவு, கிரான் கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவில் இத்திட்டம் அமுல்படுத்த படுத்தப்படவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், சையில்ட் நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான பிரதிநிதி அதித்தி கோஸ், கிரான் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் கே.சித்திர வேல், சையில்ட் பண்ட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன், புனானை 23 வது இராணுவ பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் நிலந்த பிரேமரட்ன மற்றும் AU லங்கா நிறுவன பிரதிநிதிகள், சையில்ட் பண்ட் நிறுவன பிரதிநிதிகள், நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Comments