மட்டக்களப்பு 93 நண்பர்களால் தாந்தாமலையில் உலர் உணவு வழங்கி வைப்பு...
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சிங்கப்பூரை வசிப்பிடமாக கொண்ட அமரர் சின்னத்தம்பி அவர்களின் 31வது நாள் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு 93 நண்பர்களால் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தாந்தாமலை கிராமத்தில் வசிக்கும் 100 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் (12) அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு உலர் உணவுகளை வழங்கி வைத்தார். மட்டக்களப்பு 93 நண்பர்கள் கடந்த காலங்களில் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்கி வருவதுடன் கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment