காத்தான்குடியில் 735 லேகிய பக்கெட்டுகளுடன் ஒருவர் கைது..............
யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 735 மதன மோதக காம லேகிய பக்கெட்டுகளுடன் 35 வயதுடைய நபரொருவர் டெலிகொம் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் (17) இடம்பெற்றுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிக்கமைய, குறித்த சந்தேக நபரை வாகனங்களின் டயர்களுக்கு பஞ்சர் போடும் வாகன மொன்றில் போதை லேகியம் எடுத்து வரும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 735 லேகிய பக்கெட்டுகள் மற்றும் வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment