காத்தான்குடியில்‌ 5 போதை பொருள்‌ வியாபாரிகள்‌ கைது ........

காத்தான்குடியில்‌ 5 போதை பொருள்‌ வியாபாரிகள்‌ கைது ........

காத்தான்குடியில்‌ செவ்வாய்க்கிழமை (19) போதை பொருள்‌ வியாபாரிகள்‌ இருவரை கைதுசெய்ததுடன்‌, கடந்த ஒருவாரத்தில்‌ 5  போதை பொருள்‌ வியாபாரிகள்‌ கைது செய்யப்பட்டுள்ளார்கள்‌. 

கைதானவர்களை நீதிமன்ற அனுமதியை பெற்று 3 நாட்கள்‌ பொலிஸ்‌  தடுப்பில்‌ வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி  பொலிஸார்‌ தெரிவித்தனர்‌. யுக்திய நடவடிக்கையின்‌ கீழ்‌ காத்தான்குடி பொலிஸார்‌ போதை பொருள்‌ வியாபாரிகளை தேடி கைது செய்துவருகின்ற நிலையில்‌, கடந்த வாரம் வரை 5 வியாபாரிகளை 3 கிராம்‌ தொடக்கம்‌ 400 மில்லிகிராம் வரை ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 30 தொடக்கம் 50 வயதிற்குட்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

இவர்களை   நீதிமன்ற அனுமதி பெற்று 72 மணித்தியால பொலிஸ் காவலில் வைத்து  விசாரனை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments