மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் இப்தார் நிகழ்வு -2024

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் இப்தார் நிகழ்வு -2024

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை   வளாகத்தில்  இப்தார் நிகழ்வு  நேற்று மாலை    இடம் பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் அவர்களின் தலைமையில்  நிகழ்த்தப்பட்ட  இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தக பிரமுகர்கள், பொது மக்கள் மற்றும் நலம் விரும்பிகள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் குடும்ப சகிதமாக  இப்தார் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவு, மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.







 

Comments