2023ம் ஆண்டும் மீண்டும் முதலிட விருதினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு VMD நிறுவனம்.............
யுனிலிவர் (Unilever) நிறுவனாத்தால் வருடந்தோறும் நடைபெறும் அகில இலங்கை ரீதியாக சிறந்த விநியோகஸ்தர்களுக்கான விருதினை மீண்டும் ஒரு முறை தட்டிச் சென்றுள்ளது மட்டக்களப்பு வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் நிறுவனம். கடந்த 2022ம் ஆண்டும் முதல் இடத்தை தன்வசப்படுத்திருந்த இந்நிறுவனம், 2023ம் ஆண்டும் பெற்றுள்ளது விசேட அம்சமாகும்.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு 2024.03.01 ம் திகதி அன்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது VMD நிறுவனத்தின் ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிள்ளை அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவ்விருதினை அவர் பெற்றுக் கொள்ளும் போது வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாகிய காசிப்பிள்ளை சதீஸன் மற்றும் காசிப்பிள்ளை வித்தியா ஆகியோரும் பிரசன்னமாயிருந்தனர்.
பாடசாலைகளுக்கான விளையாட்டு உதவி.....
மட்டக்களப்பில் பல வருட காலமாக சிறப்பான முறையில் தம் சேவையை விநியோகஸ்தர்களாக செயற்பட்டு வரும் வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (VMD) நிறுவனம், தன் ஊழியர்களின் அயராத முயற்சியின் பயனாகவும், கடின உழைப்பின் பயனாகவும் இவ்விருதை தட்டிச் சென்றுள்ளனர்.
பாடசாலைகளுக்கான விளையாட்டு உதவி.....
சண்முகம் காசிப்பிள்ளை அவர்கள் தன் சிறு வயது முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும், பிற்காலங்களில் வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (VMD) நிறுவனத்தை ஆரம்பித்து தன் முயற்சியால் முன்னேறிய ஒரு சிறந்த முயற்சியாளர் ஆவார். அதே பாதையில் தம் புத்திரரான காசிப்பிள்ளை சதீஸன் அவர்களையும், புத்திரியான காசிப்பிள்ளை வித்தியா அவர்களையும் இணைத்துக் கொண்டு தற்போது (VMD) நிறுவனத்தை முன்னோக்கி வெற்றி பாதையில் பயணித்தே இவ்விருதை பெற்றுள்ளார்.
பாடசாலைகளுக்கான விளையாட்டு உதவி.....
சண்முகம் காசிப்பிள்ளை, காசிப்பிள்ளை சதீஸன் மற்றும் காசிப்பிள்ளை வித்தியா ஆகியோர் வேல்முருகன் டிஸ்டிபியூட்டஸ் (VMD) நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதுடன், மட்டக்களப்பில் பின்தங்கிய பாடசாலை மாணவர்களில் மிகுந்த அக்கறை கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்கான பல செயற்திட்டங்களை நடாத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கிரிக்கெட் விளையாட்டுக்கான உதவி.....
கற்றல் உபகரணங்களுக்கான உதவி.......
Comments
Post a Comment