சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு கணக்கீட்டு முகாமைத்துவ செயலமர்வு......

 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு கணக்கீட்டு முகாமைத்துவ செயலமர்வு......



சமுர்த்தி திட்டத்தில் தற்போது மிக முக்கியமாக செயற்படும் ஒரு அமைப்பே சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பாகும். இவ்வமைப்பே தற்போது சமுர்த்தியின் பிரதான செயற்பாடுகளுக்கு காரமாக இருக்கின்றது. அவ்வமைப்புக்கள் மூலமும் சமுர்த்தி பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டு அறவிடப்படுகின்றன. எனவே இவ்வமைப்புகளுக்கான கணக்கீடு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்க அவர்களுக்கான அறிவை ஊட்ட வேண்டும் அதற்காக ஒவ்வொரு கிராமம் தோறும் இதற்கான செயலமர்வை நடத்த வேண்டும் என கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக  பிரதேச செயலாளர் V.தவராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக  சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வாராந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணத்திற்கு அமைவாக முதல் கட்டமாக ஓட்டமாவடி 208B/2 கிராம  பிரிவில் செயற்படும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர் M.L.சியாத் அவர்களின் தலைமையில் அன்மையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்வில் தலைமையக முகாமையாளரின் ஆலோசனைக்கமைய சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உதவியாளர் M.N.M.சாஜஹான் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு கணக்குகளை எவ்வாறு பதிவு செய்வது தொடர்பாகவும் பேனப்பட வேண்டிய கோவைகள் தொடர்பாகவும்  விளக்கமளித்தார்.





Comments