மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளர் விருதுகள் - 2023: (SOCIAL ACTIVIST AWARDS - 2023)

 மட்டக்களப்பில் சமூக செயற்பாட்டாளர் விருதுகள் - 2023: (SOCIAL ACTIVIST AWARDS - 2023)

மேற்படி விருதுகள் தொடர்பாக கடந்த 2023 ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 56, இவர்களுள் விண்ணப்பித்தவர்கள் 18 பேர், இவ்விண்ணப்பங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் பரிசீலனை செய்யப்பட்டன இவற்றுள் 6 விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியுடையவைகளாக முதலாவது சுற்றின்போது தெரிவு செய்யப்பட்டன. ஏனைய விண்ணப்பங்களுடன் பொருத்தமான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை.
எனவே மீண்டும் விண்ணப்பங்கள் கோரி 2024 ஏப்ரல் 21ம் திகதிக்குள் விருது வழங்கும் விழாவை நடத்துவதென SA.AWARDS - 2023 ஒருங்கிணைப்புக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்காகச் சேவை செய்யும் சமூக செயற்பாட்டாளர்களை ((Social Activist) ) கௌரவித்து வழங்கப்படும் SA. AWARDS – 2023 விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன, மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் தன்னார்வலர்களாகவும் சமூக ஆர்வலர்களாகவும் சமூக செயற்பாட்டாளர்களாகவும் சேவை செய்து வருகின்றனர். பலர் அமைப்புக்களின் ஊடாக பதவிகளைப் பெற்று உயிரோட்டமுடன் இயங்கி பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிலர் தமது வாழ்நாளில் ஒரு காலத்தில் சேவை செய்து விட்டு களைப்புற்று தமது சேவைகளை நிறுத்திக்கொண்டனர். இவ்வாறாக பலர் தமது நேரம், காலம், உழைப்பு, பணம் முதலியனவற்றை சமூகத்திற்காக அர்ப்பணித்து சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தியாக உணர்வுடன் சேவை செய்துள்ளனர்.
இவர்களைப் பாராட்டி கௌரவப்படுத்தி ஊக்குவித்து சமூகசெயற்பாட்டாளர் விருதுகளை வழங்குவதற்கு Batti Media ஊடக நிறுவனமும், இலங்கை சமூக சேவைகள் அமைப்பும் இணைந்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இவற்றுடன் SPAND அமைப்பு, மட்டக்களப்பு ஏழையின் கண்ணீர் துளிகள் அமைப்பு, அஹிம்சா சமூக நிறுவனம் மட்டக்களப்பு முதலான சேவை அமைப்புக்களும் இணைந்து செயற்படவுள்ளன.
இதன் மூலம் விருது பெறுவோர் வீறுகொண்டெழுந்து தமது சேவைகளை மேலும் முன்னெடுக்க விரும்புவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அப்பால் சிறப்பு விருதுகள் சிலவும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்களாகிய நீங்கள் மேற்கண்ட சமூகசேவையாளர்களை அடையாளப்படுத்துகின்ற பட்சத்தில் அவர்களது சேவைகளை ஆய்வு செய்து பக்க சார்பு இன்றி விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகிறோம்.
ஏற்கனவே தேசபந்து, தேசகீர்த்தி, தேசமான்ய, சமூகஜோதி என மற்றும் பல விருதுகளைப் பெற்றவர்களும் இச்சமூக செயற்பாட்டாளர் விருதுகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம், கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவொன்று செயற்பாட்டாளர்களின் பணிகளை மதிப்பீடு செய்து விருது பெறுவதற்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
இவ்வாறு விருதுபெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், சிவில் சமூக தலைவர்கள், சமயத்தலைவர்கள், கலந்து சிறப்பிக்கும் விருதுவிழாவில் (2024 ஏப்ரல் மாதம்) விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள்.
இவ் விருதுகள் தொடர்பாக பணமோ எவ்வித சன்மானமோ பெறப்படமாட்டாது. விருதின் நோக்கம் மட்டக்களப்பில் உள்ள பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உங்களை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் ஊக்குவிப்பதுமாகும். அனைத்து விண்ணப்பங்களும் நடுநிலையான கல்விமான்கள் கொண்ட குழுவினால் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முடிவு செய்யப்படும். எந்த ஒரு தனிநபர் மற்றும் நிறுவனத்தின் தலையீடு ஏதுமின்றி சிபார்சுகள் எதுவுமின்றி சுயாதீனமாக முடிவுகள் எடுக்கப்படும்.
சேவை செய்தவருக்கே செயற்பாட்டாளர் விருது என்பதே இதன் கருப்பொருள். தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும். எந்த ஒரு தனிநபர் மற்றும் நிறுவனத்தின் தலையீடு ஏதுமின்றி சிபார்சுகள் எதுவுமின்றி சுயாதீனமாக முடிவுகள் எடுக்கப்படும். சேவை செய்தவருக்கே செயற்பாட்டாளர் விருது என்பதே இதன் கருப்பொருள்.
விருதுகளை பெறவிரும்புவோர் அதற்கான ஆதாரங்களை தமது சேவை தொடர்பான நிழற்படங்கள் அது தொடர்பாக பத்திரிகைகள், இணையத்தளங்கள், முகநூல் என்பவற்றில் வெளியான செய்திகள், இவை இல்லையாயின் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு உங்களால் எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகள், கிடைத்த பதில்களின் பிரதிகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு உங்களால் எழுதப்பட்ட ஆக்கங்கள், மேலும் உங்களால் நிருபிக்க முடியுமான வேறு ஏதேனும் ஆவணங்களின் பிரதிகளை நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
விருது பெற விரும்புவோர் அல்லது விருது பெறுவதற்காக வேறொருவரை சிபார்சு செய்ய விரும்புவோர் அதற்கான படிவத்தினையும் விபரங்களையும் அனுப்பி வைக்குமாறு வட்சப் (WhatsApp) மூலம் எழுதும் பட்சத்தில் அவை PDF மூலம் உடனடியாகவே அனுப்பி வைக்கப்படும்.
அதனை பிரின்ட் (Print)) எடுத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம். குரல் வழி மூலம் விசாரணையைத் தவிர்த்து எழுத்து மூலம் 0755102911 எனும் வட்சப் இலக்கத்திற்கு உங்கள் கோரிக்கையை தாமதமின்றி அனுப்பி வைக்கவும் அனுப்பப்படும் படிவங்களை நீங்கள் நிரப்பி அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 03.04.2024 ஆகும்.
எனவே உடனடியாகவே படிவங்களைப் பெற்றுக்கொள்வதற்கான உங்கள் கோரிக்கையை வட்சப் மூலம் அனுப்பி வைக்கவும்.
Batti Media ஊடக நிறுவனம் - 2024.03.21

Comments