மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் 1C பாடசாலையாக தரம் உயர்வு............

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாடசாலைகள் 1C பாடசாலையாக தரம் உயர்வு............

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பன்சேனை பாரி வித்தியாலயம், கோரகல்லிமடு ரமணமகரிசி வித்தியாலயம், காயங்கடா கண்ணகி வித்தியாலயம், உன்னிச்சை மகா வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளும் 1C தரப் பாடசாலைகளாக தரமுயர்வு வழங்கப்பட்டு, க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலைகளின் சமூகத்தின் வேண்டுகோளுக்காக்கு அமைவாக  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் அவர்கள் முன்வைத்த  வேண்டுகோளை ஏற்று    கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள்  அனுமதி வழங்கியுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments