தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியில் 149 வது கல்லூரி தினம் சிறப்பிக்கப்பட்டது.......
மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி பழைய மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவ ஒன்றிய தலைவர், கல்லூரி அதிபர் ஆர் ஐ.ராஜேந்திரம் தலைமையில் கல்லூரி தின ஒன்றுகூடல் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் மீளமைக்கப்பட்டு ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியில் கல்வி கற்றுச் சென்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின், ஓர் நிகழ்வாக, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மைதானத்தில் தேசிய கொடி மற்றும் கல்லூரி கொடி ஏற்றப்பட்டு, தேசிய மற்றும் கல்லூரி கீதம் இசைக்கப் பட்டு ஆரம்பமான நிகழ்வில் ஓய்வு நிலை கல்லூரி அதிபர் பெற்றிக்,கல்லூரி போசகரும் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தையுமான அருட் தந்தை ரோயல் பெனாண்டோ அடிகளார், தன்னாமுனை மியானி நிருவக பணிப்பாளர் அருட்தந்தை பிரபா அடிகளார், கல்லூரி பி.எஸ்.ஐ இணைப்பாளர்.அழகையா ஜெகநாதன், தன்னாமுனை பிரதேச வைத்தியர் நடராஜா, கிராம சேவை உத்தியோகத்தர் லக்சாயின் சுகந்தராஜ் உட்பட பலரும் பங்கேற்றனர்.
150 வது ஆண்டின் மேன்மையை நோக்கிய பயணத்தின் கீழ் கல்லூரி தின நிகழ்வில் பழைய மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஓய்வு நிலை கல்லூரி அதிபர் பெற்றிக் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
Comments
Post a Comment