திருமலை இராஜகோன் ஹரிகரன் 13 வயதில் சாதனை.....
மற்றுமொரு இலங்கையின் தமிழன் பாக்குநீரினையை 13 வயதில் கடந்து சாதனை படைத்துள்ளார். தனுஸ்கோடியில் இருந்து இன்று (01) அதிகாலை 5.30 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்த, திருகோணமலை மண்ணின் மைந்தன் இராஜகோன் ஹரிகரன் மதியம் 2.00 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னாரை வந்து சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணித்தியாலங்கள் 15 நிமிடத்தில் கடந்து சாதனையினை கடந்தார் தன்வந்த்.
இராஜகோன் ஹரிகரன் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருகோணமலை இ.கி.ச.ஶ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவர் ஆவார்
Comments
Post a Comment