பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ; இதுவரை 110 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு...........
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ; இதுவரை 110 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு...........
கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான உதவி தேவைப்படும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதுவரை இப்புலமைப் பரிசில் திட்டத்தில் 110 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
பொறியியல் மற்றும் மருத்து பீடங்களுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவான மாணவர்களில் உதவி தேவைப்படும் 8 பேருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (17) கல்லடி கிறீன்கார்டின் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
சங்காரவேல் பவுண்டேசன் ஆலோசகரும், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கே.ஹரிகரராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர் எம்.உதயகுமார், லண்டனிலிருந்து வருகை தந்த சங்காரவேல் பவுன்டேண்டேஷன் ஸ்தாபகர், லண்டன் லூசியம் சிவன் கோவில் செயலாளர் சுகுமார் சங்காரவேல், சுரேகா சுகுமார், கிழக்கு மாகாண மொபிடல் நிறுவன பிரதி பொது முகாமையாளர் டாக்டர் வை.கோபிநாத், சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் செயலாளர் எஸ்.பிரேமானந்தன், மாயா நீர்ப்பாசனத் திட்ட முகாமையாளர் பி.சசிகாந், ஆய்வு கூடப் பொறியியலாளர் கே.லோகாட்சரனின் தாயார் கோகுலதேவி கமலநாதன், இரசாயனப் பொறியியலாளர் கே.சதூசனின் தாயார் பாலகௌரி குமாரதாஸ், மின்சாதனப் பொறியியலாளர் எல்.பிரசந்தியா மற்றும் சிவில் பொறியியலாளர் எல்.தர்சிக்கா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மற்றும் மாணவர்கள் பெற்றோர் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவ் வருட இப் புலமைப் பரிசில் திட்டத்திற்கு நன்கொடையாளர்களாக லண்டன் சிவகாமி பவுண்டேசன் பரமேஸ்வரன், ரெயின்வோ பவுண்டேசன் நிர்மலன், அவுஸ்திரேலியா சோமஸ்கந்தன் மற்றும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பிலிருந்து புலமைப்பரிசில் பெற்று தங்களது பல்கலைக்கழக கல்வியை வெற்றிகரமாக முடித்து வெளியேறி தற்போது பொறியியலாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் கே.சதூசன், எல்.பிரசந்தியா, எல்.தர்சிக்கா ஆகியோர் நிதியுதவி வழங்குகிறார்கள் .
சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பானது தங்களின் தனிப்பட்ட நிதியுடன் மேலும் நன்கொடையாளர்களுடன் இணைந்து இதுவரை மருத்துவம், பொறியியல், சட்டத்துறை மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சங்காரவேல் பவுண்டேசன் ஸ்தாபகர் சுகுமார் சங்காரவேல் அவர்களின் தனிப்பட்ட நிதியில் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு யாழ் இந்து கல்லூரி ஆசிரியர்களை கொண்டு zoom ஊடாக வகுப்புக்கள் நடாத்தி வருகின்றனர். மேலும் இவ் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு மாதாந்த சிறு கொடுப்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது . இத் திட்டத்திற்கு வருடமொன்றிற்கு 1 கோடி ரூபா நிதி வழங்கி வருகின்றனர்.
சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பானது தொடர்சியாக கடந்த 13 வருடங்களாக இலங்கையில் கல்வி பணிக்கு கோடி கணக்கில் பாரிய உதவிகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இவ் வருடம் உதவி பெறும் பல்கலைக்கழக மாணவர்கள்:
1 K. நேர்த்திகா - மண்டூர் - பொறியியல்
2 K. வர்சகா தம்பிலுவில் -பொறியியல்
3 S. சரண் - ஆரையம்பதி - பொறியியல்
4 R தனுசன் - வந்தாறுமூலை - பொறியியல்
5 B. கிருஜன் திருகோணமலை - பொறியியல்
6 K. அர்ச்சனா சம்பூர்இ மூதூர் - பொறியியல்
7 K. லோகிசன் கிளிவெட்டி -பொறியியல்
8. S. ஜோதிஷன் மகிழடித்தீவு இ கொக்கட்டிச்சோலை - மருத்துவம்
Comments
Post a Comment