நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் X.I.ரஜீவன் அடிகளாரின் நற்செய்தி பெரு விழா மார்ச் - 01ல்.....
மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் 2024 மார்ச் 01ம் திகதி தவக்கால தியானத்தை முன்னிட்டு, தவக்காலத்தின் 03வது வெள்ளிக்கிழமை அருட்தந்தை X.I.ரஜீவன் அடிகளாரின் நற்செய்தி பெருவிழா நடைபெறவுள்ளது.
"பறபாசுக்காக இயேசுவை விற்றாயோ" எனும் நற்செய்தி பெருவிழாவை மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையும், பங்குச்சமூகமும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நற்செய்தி பெருவிழா நாவற்குடா சின்ன லூர்து அன்னை ஆலயத்தில் 01ம் திகதி மாலை 4.30 மணிக்க ஆரம்பமாகவுள்ளது.
Comments
Post a Comment