கனேடிய மட்டு இந்துக்கல்லூரி OBA பிரதிநிதிகள் மட்டு இந்துக்கல்லூரிக்கு நேரடி விஜயம்......

 கனேடிய மட்டு இந்துக்கல்லூரி OBA பிரதிநிதிகள் மட்டு இந்துக்கல்லூரிக்கு நேரடி விஜயம்......

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் புதிதாக பதவியை ஏற்றுள்ள பழைய மாணவர் சங்கம் தம் பணியை பாடசாலைக்காக மிகச்சிறப்பாக செய்படுத்திவரும் இந்நிலையில், கனடாவில் இயங்கி வரும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் அன்மையில் மட்டக்களப்பிற்கு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இருந்தனர். இதன் போது  ச.சர்மிளராஜன் அவர்களின் ஏற்பாட்டில் அதிபர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி பிரதிநிதிகளை சந்தித்து பாடசாலையின் வளர்ச்சி, தேவைகள் பற்றி கலந்துரையாடி இருந்தனர்.

கனடாவில் வசிக்கும் இந்துக்கல்லூரியின்  பழைய மாணவர் சங்க தலைவர் பற்றிக் மோகன் சந்திரசேகரா அவர்களும், செயலாளர் திரு.கேதீஸ்வரன் அவர்களும், இங்கிலாந்தின் பழைய மாணவர் சங்க உறுப்பினரான திரு.விஜயராகவன் அவர்களும் இவ்வாறு வருகைதந்திருந்தனர்.

 இவர்கள் பாடசாலை அதிபர் திரு.பகீரதன், பழைய மாணவர் சங்க தலைவர் மு.சதீஸ்குமார், செயலாளர் இரா.சிவநாதன் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி, தங்களால் கடந்த காலங்களில் கூடைபந்தாட்ட மைதானத்தை புனருத்தானம் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில் எவ்வாறு பணிகள் முடிவுற்றுள்ளது என்பதை நேரடியாக பார்வையிட்டு பாராட்டியதுடன், புதிதாக தங்கள் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடினர்.

இதன் போது பாடசாலையின் மின்சார தேவை பற்றி கலந்துரையாடப்பட்ட போது தாம் இதற்கான ஒரு தீர்வை பெற்றுத்தர உறுதியளித்தாகவும், இதற்கு மாற்றீடான விடயத்தை கலந்துரையாடிய போது சூரிய சக்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் பற்றி தற்போதைய பழைய மாணவர் சங்கம் முன் வைத்த போது, சிறந்த திட்டம் இதனுடாக பாடசாலையின் மின் தேவையை பூர்த்தி செய்வதுடன், பாடசாலைக்கான வருமானத்தையும் ஈட்ட முடியும் என்றும் இதற்கான ஒழுங்கமைப்பை தாம் செய்து தருவாக உறுதியளித்துள்ளதாக பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் இரா.சிவநாதன் தெரிவித்துள்ளார்.






Comments