கிரான் பிரதேச செயலகத்தில் காணி ஆவணங்கள் வழங்கல்.........

கிரான் பிரதேச செயலகத்தில் காணி ஆவணங்கள் வழங்கல்.........

மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் காணி ஆவணங்கள் வழங்கு நிகழ்வு (28) நடைபெற்றது.

கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தலைமையில் நிகழ்வு நடைபெற்றதுடன், சுமார் 80 பேருக்கான காணி ஆவணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன் மற்றும் உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




Comments