லுனுகலை பிரதேச செயலாளராகின்றார் புவனேந்திரன்.....

லுனுகலை பிரதேச செயலாளராகின்றார் புவனேந்திரன்.....

பதுளை மாவட்டத்தின்  லுனுகலை பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய சிசுபாலன் புவனேந்திரன் (SLAS) அவர்களை நாளை (09)ம் திகதி கடமைகளை பொறுப்பெற்கவுள்ளார். 
இவருக்கான பிரியாவிடை நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி  திணைக்களத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் (08)ம் திகதி நடாத்தி இருந்தனர்.

இவர் கடந்த 26.01.2022 முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றி வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது ஆரம்பக் கல்வியினை மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் கற்று, 1995ல்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று நகர்ப்புறப் பாடசாலையில் தம் கல்வியை தொடர வாய்ப்பிருந்தும்  கூட, தனது கிராமத்தில் உள்ள மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை பயின்று, கிழக்கு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். பல்கலைக் கழகத்தில் அரசறிவியலில் சிறப்புக் கற்கை பயின்ற இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2011 – 2012 காலப்பகுதியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 2012 இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், முதல் உதவிப் பிரதேச செயலாளராக பசறை பிரதேச செயலகத்தில் நியமனத்தைப் பெற்று கடமையாற்றி, பின்னர் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக  கடமையாற்றி வந்து குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த  இரண்டு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். தான் செய்யும் பணியை மனத்திருப்தியுடன் சேவையாற்றிய ஓர் சேவையாளராக செயற்பட்டவர்.



அது மாத்திரமன்றி இவர் இலங்கை நிர்வாக சேவையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின்  சமுர்த்தி பிரிவிற்கு இணைத்துக் கொள்ளப்படும் முதல் பணிப்பாளர் ஆவார். 












Comments