பாவற்கொடிச்சேனையில் தையல் தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளுக்கு சான்றிதல் வழங்கிவைப்பு..............

 பாவற்கொடிச்சேனையில் தையல் தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளுக்கு சான்றிதல் வழங்கிவைப்பு..............

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாவற்கொடிச்சேனை மாதர் அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையில், தையல் தொழிற்பயிற்சியை நிறைவுசெய்த யுவதிகளுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு (15)ம் திகதி பாவற்கொடிச்சேனையில் இடம் பெற்றது.
இதன் போது தையல் பயிற்சியை மேற்கொண்ட யுவதிகளின் தையல் பொருட்கண்காட்சியும் விற்பனையும் இடம் பெற்றது.
பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீ.ஜெயகாந்த் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு, தையல் உற்பத்திகளை பார்வையிட்டதுடன், 06 மாத கால பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இதன் போது கடந்த வருடம் பாலர் பாடசாலையில் கல்வி கற்று இவ்வருடம் தரம் 1 க்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தையல் ஆசிரியை எஸ்.சசிகலா, கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments