மட்டக்களப்பு தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் ஆணின் சடலம் மீட்பு..............
மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுனயீனம் காரணமாக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (27) வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் உறவினர்கள் தேடிவந்த போதே வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment