போரதீவுப்பற்றில் மூலிகைக் கன்றுகள் நடும் நிகழ்வு.........

 போரதீவுப்பற்றில் மூலிகைக் கன்றுகள் நடும் நிகழ்வு.........

இலங்கையில் 76 வது சுதந்திர தின விழா வைபவத்தை முன்னிட்டு ”சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்” எனும் தொனிப்பொருளில் பிரதமரினால் முன்மொழியப்பட்ட 2024.02.04 ஆம் திகதி நாடு பூராகவும் மூலிகைக் கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பயன்தரும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைக் கன்றுகள் பல போரதீவுப்பற்று பிரதேச செயலக வளாகத்தினுள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார், ஆயர்வேத வைத்தியர் கிருசாந்தி நிகேதீஸ்ராஜ், கணக்காளர் தி.அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் தி.உமாபதி ஆயர்வேத மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தித் திறன் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Comments