குமாரவேலியார் கிராமத்தில் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.......
பாடசாலை இடைவிலகல் மாணவர்களின் கற்றலுக்கான ஒரு தடையாக இருக்குமானால் அதற்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதன் மூலம் பாடசாலை மாணவர்களை கல்வியை தொடர முடியும் எனும் செயற்பாட்டின் மூலம் குமாரவேலியார் கிராம சேவகர் பிரிவில் உள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் 21 மாணவர்களுக்காக 42000 ரூபா பெறுமதியிலான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி இருந்தது.
இந்நிகழ்வானது குமாரவேலியார் கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி. குணரஞ்சினிதேவி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ.இராசலிங்கம் மற்றும் அமைப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment