இலங்கை பல் மருத்துவர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் எட்டாவது அறிவியல் அமர்வு................
இலங்கை பல் மருத்துவர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் எட்டாவது அறிவியல் அமர்வு................
இலங்கை பல் மருத்துவர் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டிற்கான பிராந்திய அறிவியல் அமர்வு ஈஸ்ட் லகூன் விடுதியில் (24)ம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான துறையின் பீடாதிபதி பேராசிரியர் சதானந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வைத்தியர் முருகுப்பிள்ளையின் ஞாபகார்த்த நினைவுரையானது வைத்தியர் மேகநாதனினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிக்கும் சிறப்பு அதிதிக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment