மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட பிரவாக பிரஜா அலை செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வு...............

 மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட பிரவாக பிரஜா அலை செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வு...............

சிரச, சக்தி ஊடக வலயமைப்பு ஏற்பாடு செய்துள்ள பிரவாக பிரஜா அலை செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு கல்லடி வாவியில் இருந்து பெறப்பட்ட நீரானது, சர்வ மத தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் வாகன பேரணிக்கு கையளிக்கும் நிகழ்வு (07)ம் திகதி காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.
நாட்டின் ஆசீர்வாதத்திற்காக மேற்கொள்ளப்படும் பிரவாக பிரஜா அலை வேலைத்திட்டம் அனைத்து நதி மற்றும் நீர்நிலைகளில் இருந்து கலசமமொன்றிற்கு நீரை பெற்று கொண்ட பின்பு ஜயஸ்ரீமஹா போதி விகாரையில் ஆசீர்வாத வழிபாடு நடாத்த நியூஸ் பெஸ்ட், சக்தி, சிரச ஊடக வலையமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு நீர்நிலை நாகரீகம், பண்டைய கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் நீர் மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றிய அறிவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் வேலை திட்டம் 2024-02-04 திஸ்ஸ மகாராமை பேரலிஎல ஆரம்ப பாடசாலையில் தொடங்கி, 25 மாவட்டங்களும் உள்ளடக்கப்படும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளதுடன், எதிர்வரும் 2024 பெப்ரவரி 28 ஆம் திகதி அனுராதபுரம் ஜயஸ்ரீமஹா விகாரையில் நடைபெறவுள்ளது.
இச்செயற்றிட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, காத்தான்குடி 05, பத்ரிய்யாஹ் ஜூம்ஆ பள்ளிவாயலின் பிரதம மௌலவி அஷ்ஷேக் மௌலவி ஏ.அப்துர் ரஊப் மிஸ்பாஹீ தலைமையில் இடம்பெற்ற துஆ பிரார்த்தனையினை தொடர்ந்து வாகன பேரணியானது மன்னம்பிட்டிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு விசேட அதிதிகளாக சர்வமத தலைவார்கள், 243 வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி.என்.சிவலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன், மட்டக்களப்பு சமாதான நீதவான்கள் சமூக மேம்பாடு மையத்தின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள், காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் விவசாய சமூகத்தின் ஸ்தாபக தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான அ.ரமேஸ் உள்ளிட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிருவாகிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், இளைஞர் யுவதிகள், சமூக நலன்விரும்பிகள், வட் பாலர் பாடசாலையின் சிறார்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

Comments