ஏறாவூர் நகரசபை பொதுநூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் பரிசளிப்பு விழா...........

 ஏறாவூர் நகரசபை பொதுநூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் பரிசளிப்பு விழா...........

ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் (25)ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் நகரசபையின் விசேட ஆணையாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் ஏறாவூர் நகரசபை பொது நூலக வளாகத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இரஜாங்க அமைச்சருமான செய்யித் அலிஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகரசபையின் கணக்காளர் ஆர்.எப்.புஷ்ரா, ஏறாவூர் நகரசபையின் நிருவாக உத்தியோகத்தர் நபீறா றசீன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹாறூன் உட்பட ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலையின் அதிபர்கள், மாணவர்கள், ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்திய பேச்சிப் போட்டி, கட்டுரைப் போட்டி, சித்திரப் போட்டி, வீட்டிற்கு ஓர் நூலகம் எனும் போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்றவர்கள், நூலகங்களில் கடமை புரிந்து ஓய்வு பெற்றுச் சென்றவர்கள், நூலகங்களில் அர்ப்பணிப்போடு கடமை புரிந்தவர்களுக்கு இதன் போது சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பிரதம அதிதி மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாறூன் ஆகியோருக்கு ஏறாவூர் நகரசபை நூலகங்கள் இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments