போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா றன்விமன வீடு கையளித்தல்.................
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் 2023ம் ஆண்டுக்கான சமுர்த்தி சௌபாக்கியா ரன்விமன வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டட சமுர்த்தி பயனாளிகளிகளுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு (28) அன்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஸீர், போரதீவுப்பற்று உதவிபிரதேச செயலாளர் திரு.துலாஞ்சனன், மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவின் சிரேஸ்ட முகாமையாளர் ஜே.எப்.மனோகிதராஜ், போரதீவுப்பற்று பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் S. ஜெயராஐ், முகாமைத்துவப்பணிப்பாளர் K.குககுமரன், வங்கி முகாமையாளர் பா.பத்மநாதன், சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உத்தியோகத்தர் குபேந்திரராசா ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வீட்டினை அமைப்பதற்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ரூபாய் 750,000 ரூபா நிதி வழங்கப்பட்டதுடன், மீதி நிதியினை சமுர்த்தி பயனாளியின் பங்களிப்புடன் முடிவுறுத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
முன்னைய வீடு..................
தற்போதைய வீடு........
Comments
Post a Comment