மட்டக்களப்பில் மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயற்றிட்டம் முன்னெடுப்பு.............

 மட்டக்களப்பில் மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயற்றிட்டம் முன்னெடுப்பு.............

எஸ்கோ நிறுவனத்தினால் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (07)ம் திகதி இடம் பெற்றது.
எஸ்கோ நிறுவனத்தினால் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் உள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜே.திருச்செல்வம் பங்குபற்றுதலுடன் இடம் பெற்று.
இதன் போது எஸ்கோ நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டது. எஸ்கோ நிறுவனமானது கடந்த காலங்களில் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தல், பாதுகாப்பான புலம்பெயர்தலை உறுதிப்படுத்தல், பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி சிறார்களுக்கான கல்வி வழங்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற செயற் திட்டங்கங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர்.ஜதிஸ்குமார், ரி.நிர்மலன், மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கோகுலராஜன், எஸ்கோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர்களான எஸ்.உதயேந்திரன், பி.ஸ்ரீதரன், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

Comments