பிரதேச செயலாளராக பதவி உயர் பெற்ற மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை.......

 பிரதேச செயலாளராக பதவி உயர் பெற்ற மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை.......

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எஸ்.புவனேந்திரன் பதுளை மாவட்ட லுணுகல பிரதேச செயலாளராக பதவி உயர் பெற்றதையடுத்து மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை (08) திகதி இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இப்பிரியாவிடை நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனுக்கு மகத்தான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவிநிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு புதிய பிரதேச செயலாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை நிறைவு செய்த எஸ்.புவனேந்திரன், அங்கு உதவி விரிவுரையாளராக ஒரு வருடம் கடமையாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவான இவர் தனது 27வது வயதில் உதவிப் பிரதேச செயலாளராக பதுளை மாவட்ட பசறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி கடந்த 2021இல் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது 37வது வயதில் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று லுணுகல பிரதேச செயலாளராக கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments