சுதந்திர தினத்தினை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் ...............
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் வழிகாட்டலில் வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையில் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ஒன்று போரதீவுப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் (05) இடம்பெற்றது.
இக்குருதிக்கொடை முகாமில் மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கி வைத்திய அதிகாரி, இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இளைஞர் யுவதிகள், பொது மக்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment