பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கிவைப்பு.................

 பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கு உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கிவைப்பு.................

பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்துக்குட்பட்ட சந்திரகாந்தன் வித்தியாலய நிர்வாகம் மற்றும் கல்விச் சமூகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய போட்டோ பிரதி இயந்திரம் 01, மடிக்கணனி - 01, கணனி - 02 மற்றும் பிரிண்டிங் மெஷின் - 01 உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள், ஒன்றுகூடல் மண்டபத்திற்கான தளபாடங்கள் என்பன கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விதுள் லங்கா நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததோடு தரம் மூன்று மாணவர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டதுடன் மாணவச் செல்வங்களை பாராட்டி கௌரவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க. ஜெயவதனன் ,கோட்டக்கல்வி பணிப்பாளர் ஜெயக்குமணன், பேத்தாளை விபுலானந்தா கல்லூரி அதிபர் முருகவேல், மிதுள் லங்கா நிறுவனத்தின் பொறியாளர்களான நிமால் டிலால் பெனாண்டோ, ஜெய குணரத்ன, திட்டப் பணிப்பாளர்களான ஷித்திக், ஷாபீர் உட்பட ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Comments