மட்டக்களப்பில் மருமகன் மாமியைக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.............

 மட்டக்களப்பில் மருமகன் மாமியைக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.............

மாமனாரைக் கொலை செய்தமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்து மீள வீடு திரும்பிய மருமகன், மாமியையும் கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு கிரான் பகுதியில் அதிர்ச்சியையேற்படுத்தியுள்ளது.

கூழாவர்சேனை, வாகநேரிப் பகுதியில், கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு, 45 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடொன்றிற்கு தொழில் நிமித்தம் சென்ற தனது மனைவி, தன்னுடான தொடர்பைத் துண்டித்து, தனது மாமியுடன் மாத்திரம் தொடர்பைப் பேணி வந்தமை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டால், மருமகனே மாமியைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் 9 வருடங்களுக்கு முன்னர் மாமனாரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில், சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே சிறையிலிருந்து, வீடு திரும்பியதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், வாழைச்சேனைப் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.




Comments