ஏறாவூர் நகர சபையின் ஏற்பட்டில் சுதந்திர தின வைபவம்.............

 ஏறாவூர் நகர சபையின் ஏற்பட்டில் சுதந்திர தின வைபவம்.............

நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏறாவூர் நகர நகரசபையினால் ஏற்பாடு செய்யப் பட்ட சுதந்திர நிகழ்வு நகரசபை வளாகத்தில் (04) நடைபெற்றது.
இவ்வைபவத்தில் நகர சபையின் சபையின் விசேட ஆணையாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில், தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வு ஏறாவூர் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நகர சபை உத்தியோகத்தர்களுக்கு மூலிகைச் செடிகள் மற்றும் பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டதுடன் நகர சபை வளாகத்தில் மூலிகைச் செடிகள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் நகரசபையின் கணக்காளர் ஆர்.எப்.புஷ்ரா, நிருவாக உத்தியோகத்தர் நபீறா றசீன், ஏறாவூர் லயன்ஸ் கழக பிரதிநிதிகள் உட்பட உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments