காத்தான்குடியில் சுதந்திர ஊடகவியலாளர் போரத்தினால் இரத்தான முகாம் ....
மட்டக்களப்பு காத்தான்குடி சுதந்திர ஊடகவியலாளர் போரத்தினால் இரத்ததான முகாம் ஒன்று இன்று (04) காத்தான்குடி அல் அமீன் வித்யாலயா மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்காக இந்த இரத்ததான முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.எச்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.எம்.எஸ்.எம்.ஜாபிர் உட்பட சுதந்திர ஊடகவியலாளர் போரத்தின் செயலாளர் ஜலீஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
காத்தான்குடி ஆதார சாத்திய சாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் அலீமா ரஹ்மானின் மேற்பார்வையில், இரத்தான முகாம் இடம்பெற்றது.
Comments
Post a Comment