மயிலம்பாவெளியில் நிர்மாணிக்கப்பட்ட ஐயப்பன் இல்லம் கையளிப்பு.............
மட்டக்களப்பு. ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குபட்ட, தன்னாமுனை, மயிலம்பாவெளி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட ஐயப்பன் இல்லம் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
அகிம்சா சமூக நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் மனிதாபிமான சமூக நலன் சார் பணியின் கீழ்இ ஐயப்பன் பக்தர்களின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 71வது ஐயப்பன் இல்லமே கையளிக்கப்பட்டது.
வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற சுரேஸ் கலாதேவி எனும் பயனாளிக்கே வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டதுடன், வீட்டுக்கான ஆவணமும் கையளிக்கப்பட்டது.
அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் விஜயராஜாவின் பரிந்துரைக்கு அமைய, மயிலம்பாவெளி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயவேணி தலைமையில், கனடா ஐயப்பன் இல்ல நிதியுதவியில் வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.
நிகழ்வில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவராஜா, ஐயப்பன் இல்ல பக்தர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment