பேத்தாழை பொது நூலகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு...........

 பேத்தாழை பொது நூலகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு...........

கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொது நூலகத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வானது பேத்தாழை பொது நூலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு ஆரம்பமாகிய நிகழ்வில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிச் சான்றிதழ்கள் இதன போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
பேத்தாழை பொது நூலகம் மற்றும் விபுலானந்தர் கலை இலக்கிய மன்றம் ஆகியவை இணைந்து கல்குடா கல்வி வலயப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்திய 'அறிவுத் தேடல்' கலை இலக்கிய வினா விடைப் போட்டியின் இறுதிப் போட்டியும் இதன் போது நடைபெற்றது.
இப்போட்டியினை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரபீட விரிவுரையாளர் ஜீ.பால்ராஜ், கிழக்குப் பல்கலைக்கழக கல்விமாணி சிறப்புக் கற்கை மாணவன் கே.பிரசாந் ஆகியோர் நடுவகம் செய்திருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வறிவுசார் போட்டியில் மட்/ககு/வாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் மட்/ககு/கிரான் மத்தியகல்லூரி மாணவர்கள் மோதியிருந்த நிலையில், மட்/ககு/கிரான் மத்தியகல்லூரி மாணவர்கள் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டனர்.
இவர்களுக்கான வெற்றிச் சின்னமாக பேத்தாழை விபுலானந்தர் கலை இலக்கிய மன்றத்தின் தனித்துவ பாராட்டுச் சின்னமான "மகர யாழ்" மகுடத்தை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.ஹாரூன் மற்றும் கிராம உத்தியோகத்தர், பிரதேச பாடசாலை அதிபர்கள், பேத்தாழை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் (தெற்கு), பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச நூலகப் பொறுப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments