சொன்னதை சாதித்து காட்டிய மட்டு இந்து விழுதுகள் அமைப்பினர்.....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு கிளையாகிய விழுதுகள் குழுவினர் பாடசாலை அபிவிருத்தியில் துள்ளியமாக தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர் என அன்று தெரிவித்து இருந்தோம்.
இதன் அடிப்படையில் எந்தவொரு பாடசாலையிலும் செய்யப்படாத ஒரு வேலைத்திட்டத்தை இவ்விழுதுகள் குழுவினர் ஆரம்பித்துள்ளனர். பாவனைக்கு உதவாதது என புறந்தள்ளி வைக்கப்பட்ட மாணவர்களின் கதிரை மற்றும் மேசைகளை புதிதாக திருத்தியமைத்து கொடுப்பதற்கான முன் முயற்சியை மேற் கொண்டு கடந்து தை மாதம் 22ம் திகதி தங்கள் பணியை தொடங்கி இருந்ததை நாம் அறிவோம்.
இதற்காக அவர் முதல் கட்டமாக 100 கதிரைகள் மற்றும் 100 மேசைகளை தயார் செய்து வழங்குவதற்கான பணியையும் தொடங்கியுள்ளனர், இது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்பாக அதிபரிடம் கையளிக்க வேண்டும் எனும் வேட்கையில் இவர்களது பணி தொடரப்பட்டது. பலரும் இது சாத்தியமற்றது என கூறிய போதிலும், மாசி 05ந் திகதிக்கு முன்பதாக முடித்து ஒப்படைப்போம் என கூறிய போதும், மாசி 03ம் திகதி அன்று உத்தியோக பூர்வமாக அதிபர் திரு பகீரதன் அவர்களிடம் கையளித்து தங்கள் பாடசாலையின் மீது அவர்கள் வைத்திருக்கும் பற்றுதலை வெளிக்கொணர்தி உள்ளர் இது ஒரு பாராட்டுத்தக்க விடயமாகும்.
திருத்தப்படுவதற்கு முன் சாத்தியப்படுமா தலைவா?????????????
திருத்திய பின் இது எப்படி இருக்கு நன்றி தலைவா......
திருத்த வேலைகளின் போது....
Comments
Post a Comment