மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்.....

மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்.....

 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளை உள்ளடக்கிய 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனமும், தேசிய கூடைப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பயிற்சி முகாமானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடைப்பந்தாட்டக்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசிய மட்டத்திற்கு மாவட்டத்தில் இருந்து வீரர்களை பங்குபெற்ற தயார்ப்படுத்தும் நோக்குடனுமே இடம்பெறுகின்றது.

மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜெயன் பார்த்தசாரதியின் தலைமையில் இடம்பெற்ற பயிற்சிமுகாமில், பாடசாலைகள் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள், பயிற்றுவிப்பாளர், கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு துறை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

170 மாணவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதுடன், பயிற்சி முகாம் முடிவில் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.


Comments