மட்டக்களப்பில் 'வழிபாடு வாழ்வாகுமா ' எனும் நூல் வெளியிட்டு நிகழ்வு.......
'வழிபாடு வாழ்வாகுமா' எனும் நூல் வெளியிட்டு நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம்பெற்றது.
நூல் ஆசிரியர் அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அமதி அடிகளாரால் நூலாக்கம் செய்யப்பட்ட 'வழிபாடு வாழ்வாகுமா' நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனும். கௌரவ விருந்தினர்களாக மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளார், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடியும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி நவரெட்ணம் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டார்.
தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தில் அருட்தந்தை வென்சஸ்லோஸ் அடிகளாரின் ஆரம்ப வழிபாட்டுடன் இடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
ஆசிரியர் ரவிசங்கர் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், இல்லற வாழ்வோடு மறை போதனைகளை பணியாக மறை போதித்த மனிதன் அமரர் பொன்னையா பிரான்சிஸ் தங்கதுரையின் உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
போதகரின் ஞாபகார்த்தமாக தற்போது மறை போதகர்களாக பணியாற்றும் போதகர்கள் பொன்னாடை போர்த்தி முதன்மை அதிதியாக மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மறை மாவட்ட ஆயரினால் 'வழிபாடு வாழ்வாகுமா' நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது .
முதல் பிரதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோர்ஜ் ஜீவராஜ், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடி, கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி நவரெட்ணம் அடிகளார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூலின் மதிப்புரையினை அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அடிகளார் ஆற்றினார். வாழ்த்து செய்திகளை மாவட்ட அரசாங்க ஜஸ்டினா முரளிதரன் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடி ஆகியோர் முன்வைத்தனர். நயப்புரையை அருட்தந்தை ஜூலியன் அடிகளார் நிகழ்த்தினார்.
நன்றி உரையினை நூலாசிரியர் அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அமதி அடிகளார் ஆற்றினார்.
Comments
Post a Comment