மட்டக்களப்பில் மாமியை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்..............
தமது மாமியினை கொலை செய்து விட்டு பொலிசாரின் பிடிபடாமல் தலைமறைவாகி தப்பித்து வந்த சந்தேகநபர், (28) வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்படடுள்ளார்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிரான் நூறு வீட்டுத் திட்டப் பகுதியில் தமது உறவினரது வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், அங்கு சென்ற பொலிஸ் விசேட குழுவினர் குறித்த நபரை கைது செய்தனர்.
கடந்த 23.02.2024 கூரிய ஆயுதத்தினால், 48 வயதுடைய தமது மாமியை தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவாகி தப்பித்து வந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு மாமனாரைக் கொலை செய்தமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்து, கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு சிறைசாலையில் இருந்து பிணையில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment