மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்தில் மாணவர்களுக்கான இலவச பாடசாலை சீருடை துணி வழங்குகின்ற நிகழ்வு........

மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்தில்  மாணவர்களுக்கான இலவச பாடசாலை சீருடை துணி வழங்குகின்ற நிகழ்வு........

(கடோ கபு) அரச பாடசாலை மாணவர்களின் ஆடை விடயத்தில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்கின்ற இலங்கை ஆட்சியாளர்களின் சிந்தனை கடந்த மூன்று சதாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டம்  இவ் வருடமும் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் சீன அரசின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இத் திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு கல்விக்கோட்ட பாடசாலை மாவர்களுக்கான இலவச பாடசாலை சீருடை வழங்குகின்ற நிகழ்வு  கோட்டக் கல்விப்பணிப்பாளர்  மூ.உதயகுமாரன் அவர்களின் தலைமையில் கோட்டக்கல்விப் பணிமனை வளாகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

இலவச சீருடை வழங்குகின்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும்,  வர்த்தக இராஜாங்க அமைச்சருமாகிய கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மதிப்பிற்குரிய வை.ஜெயச்சந்திரன் அவர்களும்  கலந்துகொண்டதுடன் அழைப்பு அதிதிகளாக கொக்கட்டிச்சோலை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அவர்களும் கலந்துகொண்டதுடன்  இந் நிகழ்வில் கோட்டப்பாடசாலைகளில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இராஜாங்க அமைச்சரினால் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 21 பாடசாலைகளுக்கும் இலவச சீருடை வழங்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் வழங்கப்பட்டது.







Comments