மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன.......

 மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன.......

 மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட வெல்லாவெளி, பாலையடிவட்டை, திக்கோடை, களுமுந்தன்வெளி, தும்பங்கேணி, மண்டூர், காந்திபுரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும், காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன.

 இந்நிலையில் (03) இரவு தும்பங்கேணி கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தின் சுற்று மதிலின் ஒரு பகுதியை உடைத்து துவம்சம் செய்து விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

 பட்டிருப்புக் கல்வி வலயத்தின் கீழுள்ள தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தியாலயம் விவசாயச் சூழலில் அமைந்துள்ளது. மிகத் தொலைவிலிருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் அப்பாடசாலைக்கு ஆசிரியர்கள் சென்று அப்பகுதி மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றனர்.

 அதிபர் ஆசிரியர்களினதும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரதும் முயற்சிகளின் பலனாக அப்பாடசாலைக்கு ஒருபக்க மதில் கட்டப்பட்டுள்ளது. பாடசாலைக்கு மாணவர்களும் காட்டு யானைகளின் அச்சத்தின் மத்தியிலேயே சென்று வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒருபகுதியை இவ்வாறு காட்டு யானை உடைத்து துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.



Comments