களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன............

 களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன............

மட்டக்களப்பு களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தால், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மண்முனை மேற்கு குறிஞ்சாக்கேணி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், சங்கத்தின் தலைவர் க.கிரஷோபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மண்முனை மேற்கைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளில் இருந்து சுமார் நூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார் மற்றும் மன்முனை மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.ரகுகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments