தேசிய தொழிற்கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..........
இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் மாவட்ட செயலகத்தினால் பாதுகாப்பற்ற புலம் பெயர்தளை மட்டுப்படுத்தி சமூகப் பொருளாதார அபிவிருத்தியை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் தேசிய தொழிற்கல்வி நிறுவனத்தின் கட்டுமான இயந்திர சாரதி பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அரசாங்கத்தினால் பாதுகாப்பற்ற புலம் பெயர்தளை மட்டுப்படுத்தலும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையிலும் போதைப் பொருள் பாவனையில் இருந்து இளைஞர்களை காப்பாற்றுவதுடன் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு குறைந்த கல்வித் திறன் உடைய கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்கும் செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக ராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் 4 கிளிப் கனரக வாகன கட்டுமான இயந்திர சாரதி பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். நிர்மலன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் கலந்து கொண்டு கட்டுமான இயந்திர சாரதி பயிற்சியை பூர்த்தி 22 செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார் ஆஸ்திரேலியா நாட்டு நிதி உதவியுடன் குருநாகல் மாவட்டத்தில் 14 நாள் இடம்பெற்ற தொழில் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே ஜெதீஸ்வரன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். கட்டுமான இயந்திர பயிற்சி தேசிய தொழிற்கல்வி நிறுவனத்தினால் இப்பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment