மட்டக்களப்பபில் கொடைவள்ளல் மலர் நூல் வெளியீடு...........
கல்வி மற்றும் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு பாரிய தொண்டாற்றிய கொடைவள்ளல் அமரர் கதிராமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை (KOV) பற்றிய வரலாற்றுப் பதிவுகள் பற்றிய நூல் வெளியீடு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் (18 ) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் பொது முகாமையாளர், இராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்பு அவர்களும் முதன்மை அதிதியாக V.வாசுதேவன் (பிரதேச செயலாளர், மண்முனை வடக்கு, மட்டக்களப்பு) அவர்களும், கௌரவ அதிதியாக S.S.மனோகரன் (ஓய்வுநிலை மாவட்ட கல்வி பணிப்பாளர்) அவர்களும் சிறப்பு அதிதிகளாக வைத்திய கலாநிதி கிருஷ்ணப்பிள்ளை பாலசுப்பிரமணியம், சகுந்தலா பாலசுப்பிரமணியம் தம்பதியினரும் வருகை தந்திருந்தனர்.
நூலின் முதல் பிரதியை கதிராமத்தம்பி உடையான் வேலுப்பிள்ளை ஞாபகார்த்த நம்பிக்கை நிதிய தலைவர் கலாநிதி . கனகராஜா பிரேம்குமார் ஆன்மீக அதிதி சுவாமி. நீலமாதவானந்தாஜி மகராஜ் அவர்களிடம் வழங்கி வைத்தார்.
Comments
Post a Comment