மட்டக்களப்பில் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி..............

 மட்டக்களப்பில் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி..............

கிழக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோத்தர்கள் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் வகையில், மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள விரிவாக்க பிரிவு பிரதி பணிப்பாளர் பரமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில், மாகாண பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தலைமையில், கிழக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோத்தர்களுக்கு இடையில் சுற்றுப்போட்டி நடைபெற்றது.

அணிக்கு 11 பேர் கொண்ட 7 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நான்கு அணிகள் கலந்து கொள்ளும் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் வீரர்கள் அறிமுகத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய விவசாய திணைக்களங்கள் மற்றும் மாகாண பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments