வெற்றிகரமாக முடிவுற்ற இந்துவின் இரத்ததான நிகழ்வு.....

 வெற்றிகரமாக முடிவுற்ற இந்துவின் இரத்ததான நிகழ்வு.....

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் (02)ம் திகதி ஆகிய இன்று இந்துக்கல்லூரியின் நல்லையா மண்டபத்தில் இரத்தான நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மு.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்துக்கல்லூரி அதிபர் திரு.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்ரெத்தான நிகழ்வில் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தால், மட்டக்களப்பு இரத்த வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றதாக பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் இரா.சிவநாதன் தெரிவித்தார்.


Comments